ADDED : ஏப் 23, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
ஆவடி:பட்டாபிராம், பாரதியார் நகரில் அதிகாரிகள் அலட்சியத்தால், 81 வயது முதியவர் ஓட்டளிக்காமல் மன உளைச்சலுடன் திரும்பி சென்றனர்.
ஆவடியை அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜன், 81. இவர், காலை 8:30 மணியளவில், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள, 251 வது ஓட்டுச்சாவடிக்கு சென்றார்.
காலை நேரம் என்பதால், 100 க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர். 'நான் மூத்த குடிமகன் என்பதால், வரிசையை தவிர்த்து ஓட்டளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, கேட்டார். ஆனால், சிறப்பு பாதுகாப்பு படையினர் அனுமதி அளிக்கவில்லை.
இதனால், ஓட்டளிக்காமல் மன உளைச்சலுடன் திரும்பி சென்றார். அதிகாரிகளிடம் பேசவும், காவலர்கள் அனுமதி அளிக்கவில்லை.
