ADDED : பிப் 20, 2025 01:03 AM
அ நிறம் | அளவு
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, குட்டி தம்பிரான் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 73. இவர், கடந்த 8ம் தேதி மதியம், புளியந்தோப்பு, பி.எச்., சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த நபரிடம் பணம் எடுத்து தர கூறியுள்ளார். அவரும் 2,000 ரூபாய் எடுத்து கொடுத்து, ராமச்சந்திரனின் ஏ.டி.எம்., கார்டும் கொடுத்து அனுப்பியுள்ளார். நேற்று வங்கிக்கு சென்று கணக்கு சரிபார்த்தபோது, 48,000 ரூபாய் குறைந்திருந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
