/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' காஸ் ' அடுப்பு பற்றவைத்த மூதாட்டி பலி
/
' காஸ் ' அடுப்பு பற்றவைத்த மூதாட்டி பலி
ADDED : நவ 09, 2024 12:22 AM
அயனாவரம்: அயனாவரம், செட்டி தெரு, முதல் சந்தை சேர்ந்தவர் சுலோக்சனா, 68. இவரது கணவன் பசுபதி; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சுலோக்சனா, மன அழுத்தத்திற்கான மருத்து எடுத்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு சுலோக்சனா, சமையல் அறையில், டீ போடுவதற்காக, காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக தீக்குச்சியில் இருந்த தீ, சுலோக்சனா அணிந்திருந்த நைலான் நைட்டிமீது பட்டு, தீப்பிடித்து எரிந்தது. அலறி துடித்த சுலோக்சனாவை, வீட்டில் இருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மார்பு, வயிறு மற்றும் கால்களில், 54 சதவீத பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி, சுலோக்சனா உயிரிழந்தார். இதுகுறித்து, அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.