நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை,
சைதாப்பேட்டை, திடீர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 35. இவர் மீது, கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர், மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். மேலும், மறைமுகமாக இருந்து கஞ்சா விற்பனை, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து, சைதாப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து, அவரை தேடி வந்த நிலையில் நேற்று சிக்கினார்.