/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கொட்டினால் நடவடிக்கை ஊராட்சி நிர்வாகம் திட்டவட்டம்
/
குப்பை கொட்டினால் நடவடிக்கை ஊராட்சி நிர்வாகம் திட்டவட்டம்
குப்பை கொட்டினால் நடவடிக்கை ஊராட்சி நிர்வாகம் திட்டவட்டம்
குப்பை கொட்டினால் நடவடிக்கை ஊராட்சி நிர்வாகம் திட்டவட்டம்
ADDED : மார் 12, 2024 12:34 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது, பாணவேடு தோட்டம். இங்கு, அருந்ததியர் காலனி, பாணவேடு தோட்டம், பிடாரி தாங்கல் மற்றும் பிடாரி தாங்கல் காலனி பகுதிகள் உள்ளன. 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று, 2015ல் சமுதாய மயானம் பயன்பாட்டிற்கு வந்தது. காலப்போக்கில் சுற்றுவட்டார பகுதி மக்களின் குப்பை கொட்டும் இடமாக மயானம் மாறி வருகிறது.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகமும் அப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டி தீயிட்டு கொளுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இறுதிச் சடங்கு மற்றும் உடல்களை தகனம் செய்ய வருவோர், முகம் சுளிக்க வைக்கும் அவலம் நிலவி வந்தது.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, குப்பை கழிவுகளை அகற்றி மயானத்தை சமன்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், 'சமத்துவ மயானம் மற்றும் அதையொட்டி உள்ள சாலையோரத்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மீறினால், தமிழ்நாடு ஊராட்சி சட்டம் - 1994 பிரிவு 144ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பதாகை ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'மயானத்தில் சுற்றுச்சுவர் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

