/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் நாளை பங்குனி பெருவிழா துவக்கம்
/
கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் நாளை பங்குனி பெருவிழா துவக்கம்
கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் நாளை பங்குனி பெருவிழா துவக்கம்
கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் நாளை பங்குனி பெருவிழா துவக்கம்
ADDED : மார் 15, 2024 12:42 AM
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில், நாளை பங்குனி மாத பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா, வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
இந்தாண்டு பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 7:00 முதல் 7:30 மணிக்குள், கொடியேற்றம் நடக்கிறது. அடுத்த நாள் காலை 8:30 மணிக்கு வெள்ளி சூரிய வட்டமும், இரவு 9:00 மணிக்கு சந்திரவட்ட சேவையும் நடக்கிறது.
பங்குனிப் பெருவிழாவின் பிரதான நிகழ்வாக, வரும் 22ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 8:00 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். காலை 9:00 மணிக்கு, பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது.
வரும் 23ம் தேதி காலை, திருஞானசம்பந்தர் எழுந்தருளல், எலும்பை பூம்பாவையாக்கி அருளல் நடக்கிறது. மாலை 3:30 மணிக்கு வெள்ளி விமானத்தில், இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது.
ஐந்திருமேனிகள் விழா, வரும் 24ம் தேதி நடக்கிறது. 25ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு 7:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு, கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
மருந்தீஸ்வரர் கோவில்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பெருவிழா, நாளை இரவு 8:30 மணி முதல் 9:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவின் முக்கிய நாளான 22ம் தேதி காலை 6:30 மணிக்கு சந்திரசேகரர் தேர் திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பரிவேட்டை விழா வரும், 23ம் தேதி நடக்கிறது. 25ம் தேதி சந்திரசேகரர் கடல் நீராடல், தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
விழாவின் கடைசி நாளான 26ம் தேதி சந்திரசேகர் தெப்பத் திருவிழா, வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, 18 திருநடன காட்சி ஆகியவை நடக்கின்றன.

