/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் ஏற முயன்ற பயணி பின்னால் வந்த பஸ் ஏறி பலி
/
பஸ்சில் ஏற முயன்ற பயணி பின்னால் வந்த பஸ் ஏறி பலி
ADDED : அக் 15, 2024 12:20 AM
அண்ணா நகர், அரும்பாக்கம், 100 அடி சாலையிலுள்ள வினாயகபுரம் பேருந்து நிறுத்தத்தில், அடையாளம் தெரியாத 50 வயது பயணி ஒருவர் நேற்று அதிகாலை காத்திருந்தார்.
அந்த நிறுத்தத்தில் நின்று சென்ற பேருந்தில், அவர் திடீரென ஏற முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது, பின்னால் வந்த கோயம்பேடு - திருவான்மியூர் செல்லும் தடம் எண்: '78ஜி' பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 44, என்பவரை கைது செய்த போலீசார், இறந்தவர் குறித்தும் விசாரிக்கின்றனர்.