/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர் அதிரடி ஆகற்றம்
/
கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர் அதிரடி ஆகற்றம்
கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர் அதிரடி ஆகற்றம்
கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர் அதிரடி ஆகற்றம்
ADDED : ஜூன் 18, 2025 11:58 PM

முகலிவாக்கம், சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம் முகலிவாக்கத்தின் பல பகுதிகள், ஒவ்வொரு ஆண்டு பருவ மழைக்கும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்வேறு நடவடிக்கைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவள்ளுவர் நகரில், பவுனம்மாள் தெருவின் பின்புறம் ஏரி கால்வாய் ஒன்று, சில கிலோ மீட்டர் துாரம் இருந்ததும், அது ஆக்கிரமிப்பால் கபளீகரம் செய்யப்பட்டதும் வருவாய் துறையால் கண்டறியப்பட்டது.
அதை மீட்கும் முயற்சியில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதில், பவுனம்மாள் தெருவின் பின்புறம் தனியார் நிலம் வைத்துள்ளவர், வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்வதற்கு ஏதுவாக சாலை அமைத்திருந்தார். சில வீடுகளின் பின்புறத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமித்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்து, கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதியை குறியிட்டு அகற்றும்படி கோரினர்.
ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில், பலத்த போலீஸ் பாதுாப்புடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.
உரிய நோட்டீஸ் வழங்காமல் இடிப்பதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
திருவள்ளுவர் நகரில், நீர்ப்பாசனத்திற்கான ஏரி கால்வாய் ஒன்று இருந்ததும், அது ஆக்கிரமிப்பில் உள்ளதும் கண்டறியப்பட்டது. அதை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
கடந்த 12ம் தேதி சர்வேயர் வாயிலாக அளக்கப்பட்டது. முதல் கட்டமாக, 800 மீட்டர் துாரம் கொண்ட கால்வாய் சர்வேயர் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.
இக்கால்வாய் இரண்டு மீட்டர் அகலத்தில் இருந்து, 5.5 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. முதலில், 800 மீட்டர் மீட்கப்பட்ட பின், அடுத்த கட்டமாக சர்வேயர் வாயிலாக அளந்து, கால்வாய் மீட்கப்பட்டு வடிகால்வாய் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.