/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர் அடையாளம் தெரிந்தது
/
ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர் அடையாளம் தெரிந்தது
ADDED : அக் 13, 2024 02:15 AM
சென்னை:சேத்துப்பட்டு பசுமை பூங்கா ஏரியில் இறந்த இளைஞர், அயனாவரத்தைச் சேர்ந்தவர் என்பது அடையாளம் தெரியவந்தது.
சேத்துப்பட்டு பசுமை பூங்கா ஏரியில் நேற்று முன்தினம் மாலை, வாலிபர் ஒருவர் குதித்துள்ளார். இதை அறிந்த பூங்கா மேலாளர் வெங்கடேசன், 51 என்பவர், கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஏரியில் குதித்த இளைஞரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அயனாவரம், பி.இ., கோவில் வடக்கு மாட வீதியைச் சேர்ந்த ராம்நாத், 30 என்பது தெரியவந்தது.
பின் தலையில், எட்டு மாதங்களாக அடிக்கடி வலி ஏற்பட்டு வந்ததால், ராமநாத் மன அழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர், ஆறு மாதத்திற்கு முன் திருவான்மியூரில் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.