/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளசுகளுக்கு காமெடியுடன் கருத்து கூறிய 'மீண்டும் தனிக்குடித்தனம்' நாடகம்
/
இளசுகளுக்கு காமெடியுடன் கருத்து கூறிய 'மீண்டும் தனிக்குடித்தனம்' நாடகம்
இளசுகளுக்கு காமெடியுடன் கருத்து கூறிய 'மீண்டும் தனிக்குடித்தனம்' நாடகம்
இளசுகளுக்கு காமெடியுடன் கருத்து கூறிய 'மீண்டும் தனிக்குடித்தனம்' நாடகம்
ADDED : ஜன 13, 2025 01:43 AM

பெரியவர்களை மதிக்கும் குணம் உடைய மகன் குமரஹரியுடன் பெற்றோர், பெரியப்பா, தாத்தா ஆகியோர் வசிக்கின்றனர்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பெரியப்பா, வீட்டு சமையலை கவனித்துக் கொள்கிறார்; தாத்தா வீட்டு வேலைகளை பார்க்கிறார்.
இருவரும் சேர்ந்து குமரஹரிக்கு, கமலா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். புகுந்த வீட்டில் எந்த வேலையும் இல்லாததால், கமலா சந்தோஷமாக இருக்கிறார்.
எனினும் கமலாவின் தாய், மகளிடம், 'வீட்டிற்கு வயதானவர்கள் அதிகம் இருப்பதால், பிற்காலத்தில் பணிவிடை செய்து மாளாது' எனக்கூறி, தனிக்குடித்தனத்திற்கு துாபம் போடுகிறார்.
தாயின் பேச்சை கேட்டு, கமலாவும் குமரஹரியிடம் தனிக்குடித்தனம் போக வற்புறுத்துகிறாள். அவளை பல முறை சமாதானப்படுத்தியும், குமரஹரியால் திருப்திப்படுத்த முடியவில்லை.
இதனால் குமரஹரி, தனிக்குடித்தனம் செல்ல மூன்று நிபந்தனைகள் விதிக்கிறார். முதலில், என் பெற்றோர் மற்றும் பரம்பரை சொத்துக்களை வாங்கக் கூடாது.
இரண்டாவது, என் குடும்பத்தினரோ, உன் குடும்பத்தினரோ யாரும் நம் வீட்டிற்கு வரக்கூடாது. மூன்றாவது, நீ உன் குடும்பத்தாரை சந்தித்து உறவு கொண்டாடினால், விவாகரத்து செய்து கொள்ளலாம்.
இதை கேட்ட கமலா, தன் தவறை உணர்ந்து, நாம் முன்பு எப்படி இருந்தோமோ அப்படியே இருக்கலாம் என்கிறார். மனைவியின் மாற்றத்தால், ஹரி நிம்மதியடைகிறார்.
வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு, கடைசி காலத்தில் அரவணைப்போடு இருக்க வேண்டும் என நினைக்கும் பிள்ளை, தன் மனைவியின் தனிக்குடித்தன ஆசைக்கு போடும் கடிவாளத்தை நகைச்சுவையுடன் பிரதிபலித்தது, 'மீண்டும் தனிக்குடித்தனம்' நாடகம்.
மடிப்பாக்கம், ஸ்ரீசத்சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாவில், ஜி.எஸ்.பிரசாந்த் தயாரிப்பில், வி.பி.எஸ்.ஸ்ரீராம் கதை, வசனம், இயக்கத்தில், இந்த நாடகம் மேடை ஏறியது.
இதில், குமரஹரியாக சாய்பிரசாத், கமலாவாக அனுசுரேஷ், குமரஹரியின் தந்தை கணேசனாக -சுப்பிரமணியம், தாய் காமேஷ்வரியாக - ஜெயஸ்ரீ, மாமியார் மதுரவேணியாக - கீதா நாராயணன், பெரியப்பா சுந்தரேசனாக - வி.பி.எஸ்.ஸ்ரீராமன், தாத்தா ஜல்பேசனாக - கணபதி சங்கர் உள்ளிட்ட பலர், பாத்திர வார்ப்பு ஏற்றதுபோல் சிறப்பாக நடத்திருந்தனர்.
- -நமது நிருபர் -