/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாறுமாறு ஆட்டோ ஓட்டுனர் வலை வீசி தேடுது போலீஸ்
/
தாறுமாறு ஆட்டோ ஓட்டுனர் வலை வீசி தேடுது போலீஸ்
ADDED : பிப் 01, 2024 12:27 AM

சென்னை, அண்ணா மேம்பாலத்தில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அதிவேகமாகவும், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாகவும் நேற்று முன்தினம் வாகனத்தை ஓட்டி உள்ளார்.
இதை வீடியோ எடுத்த ஒருவர், சென்னை போக்குவரத்து காவல் துறையின் 'எக்ஸ்' தளத்தில் வீடியோவுடன் புகார் பதிவு செய்தார். உடனே, இது குறித்து தேனாம்பேட்டை போக்குவரத்து ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், உண்மை என தெரியவந்தது. தொடர்ந்து, ஆட்டோ எண்ணை வைத்து, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், 8,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தொடர்பு கொண்டபோது, ஆட்டோ ஓட்டுனர் இணைப்பை துண்டித்ததுடன் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார்.
அவரை பிடிக்கும் பணியில், போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளதாக, தேனாம்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் செல்வம் தெரிவித்தார்.