/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் விழா பெரம்பூரில் நெகிழ்ச்சி
/
பொங்கல் விழா பெரம்பூரில் நெகிழ்ச்சி
ADDED : ஜன 18, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு பூரண குணம் அடைந்தவர்களுக்காக, பெரம்பூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில், பொங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், சிவ சபா அகில பாரதிய சன்னியாசிகள் சங்க தலைவர் அன்னை ஞானேஸ்வரி கிரி, கோவை, கவுமார மடத்தைச் சேர்ந்த அன்னை பிரேம பிரியா, பள்ளி தாளாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, ஆசியுரை வழங்கினர்.
விழாவில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், மடங்களில் இருந்து பிரசாதங்களும் வழங்கப்பட்டன.