/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குண்டும் குழியுமான சமயபுரம் பிரதான சாலை தினமும் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : நவ 16, 2024 12:43 AM

போரூர், போரூர் சுங்கச்சாவடி மற்றும் மவுன்ட் - பூந்தமல்லி சாலையை இணைக்கும் பிரதான சாலை, குண்டும் குழியுமாக உள்ளதால் கடும் நெரிசல் தொடர்கிறது.
போரூரில், வானகரம் ஊராட்சி மற்றும் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் எல்லையில், சமயபுரம் பிரதான சாலை உள்ளது.
இது, சென்னை -மதுரவாயல் --- தாம்பரம் பைபாஸ் சாலையில், 2 கி.மீ., தொலைவில், சுங்கச் சாவடிக்கு முன்பாக பிரிந்து, போரூர் --- கிண்டி செல்லும் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இணைகிறது.
இந்த சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இதில், வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமயபுரம் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் இச்சாலை, போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து விடுகிறது.
நேற்று காலையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.
எனவே, சாலையை போக்குவரத்திற்கு ஏதுவாக சீர் செய்வதுடன், வாகன நெரிசலை சீர்செய்ய, போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.