/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை
UPDATED : ஜூலை 14, 2024 01:42 PM
ADDED : ஜூலை 14, 2024 08:20 AM

சென்னை: தமிழக பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்பட்ட திருவேங்கடத்தை போலீசார் இன்று (ஜூலை-14) காலையில் சுட்டுக்கொன்றனர்.
கடந்த வாரம் ஜூலை-5 ல் தமிழக பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டி கொன்றது. இதில் பலர் சரண் அடைந்தனர். இந்த கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மாயாவாதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் இன்று போலீஸ் கஸ்டடியில் உள்ள திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு நலன் கருதி ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.