/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் நிலத்தில் தேங்கும் கழிவுநீரால் தொடரும் அவதி
/
தனியார் நிலத்தில் தேங்கும் கழிவுநீரால் தொடரும் அவதி
தனியார் நிலத்தில் தேங்கும் கழிவுநீரால் தொடரும் அவதி
தனியார் நிலத்தில் தேங்கும் கழிவுநீரால் தொடரும் அவதி
ADDED : ஜன 18, 2025 12:29 AM

பெருங்குடி,பெருங்குடி, டெலிபோன் நகரில், தனியார் நிலத்தில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரால், அப்பகுதியினர் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி, வார்டு 184க்கு உட்பட்டது பெருங்குடி. இங்கு, டெலிபோன் நகர், 17வது குறுக்கு தெருவில், குடியிருப்புகளுக்கு மத்தியில், தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பு காலி இடத்தில், மழைநீர் மற்றும் கழிவுநீர், குளம்போல் தேங்கியுள்ளது.
சிறு மழை பெய்தாலும், காலி இடத்தில் தேங்கும் மழைநீர் நிரம்பி, குடியிருப்புகளுக்குள் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து, சுகாதார சீர்கேட்டையும், ஏற்படுத்துகிறது.
குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
டெலிபோன் நகரில் 2000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 10 ஏக்கர் பரப்புள்ள தனியார் இடத்தில் நீர் தேங்கி நிற்கிறது. கோடை காலத்திலும் 3 அடி உயரத்திற்கு நீர் தேங்கி நிற்கிறது.
தவிர, அருகிலுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் இத்துடன் கலப்பதால், தேங்கியுள்ள நீர் அசுத்தமாகி, துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், ஆண்டு முழுதும் கொசுத் தொல்லை, மூச்சுத் திணறல் மற்றும் பலவித நோய்த் தொற்றுக்கும் ஆளாகி வருகிறோம்.
தனியார் நிலத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர் கோரிக்கை வைத்த நிலையில், 4 அடி அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த பணி முழுமை பெறவில்லை.
சிறு மழை பெய்தாலும், நீர்மட்டம் உயர்ந்து, அருகிலுள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.