/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஓசி சிக்கன் ரைஸ்' கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது
/
'ஓசி சிக்கன் ரைஸ்' கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது
ADDED : அக் 14, 2024 02:20 AM
கொடுங்கையூர்:வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனி, 10வது தெருவிலுள்ள துரித உணவகம் ஒன்றில், சூர்யா, 29, என்பவர் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, குடிபோதையில் இந்த கடைக்கு வந்த ஐவர் கும்பல், தாங்கள் அப்பகுதி ரவுடிகள் எனக் கூறி, மாமூலுடன் இலவச 'சிக்கன் ரைஸ்' கேட்டுள்ளனர். தராவிட்டால், கத்தியால் வெட்டி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
அத்துடன், கடையில் இருந்த காஸ் அடுப்பு, சிக்கன், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி கொட்டியுள்ளனர்.
தடுக்க வந்த சமையல் மாஸ்டர் சூர்யாவை, கடுமையாக தாக்கி விட்டு தப்பியுள்ளனர்.
காயமடைந்த சூர்யாவை அங்கிருந்தோர் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.
இதில் தொடர்புள்ள பழைய குற்றவாளியான வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனி, 6வது தெருவைச் சேர்ந்த தொப்பை அசோக், 27, வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்த ரவுடி பல்லு ரவி, 27, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர். தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.