/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'குடி'மகன்களின் கூடாரமாகிய ரயில் நிலைய கழிப்பறை
/
'குடி'மகன்களின் கூடாரமாகிய ரயில் நிலைய கழிப்பறை
ADDED : பிப் 13, 2025 12:12 AM

பட்டாபிராம் ரயில் நிலையத்தை, தினமும் 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பட்டாபிராம் ரயில் நிலையம், தெற்கு பகுதி, 'டிக்கெட்' முன்பதிவு மையம் அருகே ஐந்து ஆண்டுகளுக்கு முன் கழிப்பறை கட்டப்பட்டது. அவை இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக் கிடந்தது. பயணியர் கழிப்பறை வசதி இல்லாமல், புதர்கள், சாலையோரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
கட்டி திறக்கப்படாத கழிப்பறையின் பூட்டை 'குடிமகன்கள்' உடைத்து, இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பணி முடிந்து செல்லும் பயணியர் அச்சமடைந்துள்ளனர். ரயில்வே நிர்வாகம், கழிப்பறையை சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மா.சுப்பிரமணியன், பட்டாபிராம்.