ADDED : மார் 10, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையை நிறுவிய, டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் 84 வது பிறந்த நாளையொட்டியும், அவரது மருத்துவ சேவைக்கு நன்றி தெரிவித்து கவுரவிக்கும் வகையிலும், நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை முதல் வாலேஸ் கார்டன் இரண்டாவது தெரு வரை, இடைப்பட்ட 400 மீட்டர் நீளத்தில் உள்ள, பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை, மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெயர் மாற்றப்பட்ட புதிய சாலையை, நேற்றுமுன்தினம் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

