/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலையில் காயமடைந்த தாய் தள்ளி விட்ட மகன் கைது
/
தலையில் காயமடைந்த தாய் தள்ளி விட்ட மகன் கைது
ADDED : அக் 17, 2024 12:27 AM
சென்னை,ராயப்பேட்டை, ஆர்.ஓ.பி.பிரதான தெரு ஹால்ஸ் கார்டனைச் சேர்ந்தவர் உஷாராணி, 66. இவரது மகன் வெங்கடேசன், 43.
நேற்று முன்தினம் இரவு உஷாராணியை மயக்க நிலையில், அவரது மருமகள் மோகனா, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
'சி.டி.ஸ்கேன்' எடுத்து பார்த்ததில், தலையில் ரத்தக் கசிவு இருப்பது தெரிந்தது. மோகனாவிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, அவரது கணவர் வெங்கடேசன் தள்ளிவிட்டார் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, உஷாராணிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
பின், அங்கிருந்து தரமணி வி.எச்.எஸ்., மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
சம்பவம் அறிந்த அண்ணா சாலை போலீசார், வெங்கடேசனை நேற்று கைது செய்தனர்.