/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை அகற்றும் பணி துவக்கம் நீண்ட நாள் பிரச்னைக்கு விடிவு
/
குப்பை அகற்றும் பணி துவக்கம் நீண்ட நாள் பிரச்னைக்கு விடிவு
குப்பை அகற்றும் பணி துவக்கம் நீண்ட நாள் பிரச்னைக்கு விடிவு
குப்பை அகற்றும் பணி துவக்கம் நீண்ட நாள் பிரச்னைக்கு விடிவு
ADDED : நவ 04, 2025 12:40 AM

திருவேற்காடு: கோலடியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளதால், நீண்ட நாள் பிரச்னைக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
திருவேற்காடு நகராட்சியில் குப்பை சேகரித்து வைக்க வசதி இல்லை. இதனால், கோலடி சாலையில், திருவேற்காடு நகராட்சிக்கு சொந்தமான 4,800 சதுர அடி இடத்தில், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.
அங்கிருந்து தரம் பிரித்து. அகற்றப்படுகிறது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கோலடியில், அளவை மீறி மலைபோல குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதையொட்டி 120 அடி உயரம் மின் பரிமாற்ற கோபுரம் அமைந்துள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால், அந்த மின் கோபுரம் வலுவிழக்கும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்பகுதியை ஒட்டி உள்ள தேவி நகர், நேதாஜி தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
நவீன எரிவாயு தகனமேடையும் உள்ளது. இதனால், மக்கள் சுகாதார சீர்கேடால் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும், குப்பை கழிவுகளை மேயும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களால் சாலை விபத்தும், அடிக்கடி ஏற்படுகின்றன.
இங்கு, திருவேற்காடு, கோலடி, அயனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சடலங்கள் கொண்டு வரப்பட்டு எரிக்கப்படுகிறது.
தொடர் புகாரை அடுத்து, திருவேற்காடு நகராட்சி தனியார் ஒப்பந்ததாரர் மூலம், நேற்று முதல் லாரிகளில் குப்பை அப்புறப்படுத்தும் பணி துவக்கி உள்ளது.
நேற்று மட்டும், 15 லாரிகளில் 30 சதவீத குப்பையை அப்பூருக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஒரு வாரத்தில் குப்பை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

