/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சீனியர் கூடைப்பந்து மினியன்ஸ் அணி அபாரம்
/
மாநில சீனியர் கூடைப்பந்து மினியன்ஸ் அணி அபாரம்
ADDED : செப் 25, 2025 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மாநில சீனியர் கூடைப்பந்து போட்டியில், மினியன்ஸ் அணி, 72 - 39 என்ற புள்ளி கணக்கில் மெட்ராஸ் பிகிள்ஸ் அணியை தோற்கடித்தது.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
போட்டியில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட ஆண்களில் 132 அணிகளும் பெண்களில் 56 அணிகளும் என, மொத்தம் 188 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான போட்டியின் வெற்றி - தோல்வி விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டு உள்ளது.