/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது சுரங்கப்பாதை
/
மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது சுரங்கப்பாதை
ADDED : ஜன 23, 2024 12:36 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் கிழக்கு பகுதி மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், அம்பேத்கர் நகர் - மாணிக்கம் நகர் இணைப்பு சுரங்கப்பாதை உள்ளது.
இங்கு, காலை, மாலை 'பீக் ஹவர்' வேளைகளில் கடும் நெரிசல் ஏற்படும். 'மிக்ஜாம்' புயலின் போது, சுரங்கப்பாதையில், நான்கு நாட்களாக, ஐந்து அடிக்கும் மழைநீர் தேங்கியிருந்ததால் சேதமடைந்து, ஊற்று நீர் பெருக்கெடுத்தது.
நாளுக்கு நாள் வெடிப்பு அதிகமாகி, தரைத்தளம் மேலேழும்பியதால், போக்குவரத்து சிரமமானது.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மாநகராட்சி ஒப்பந்த பணி மூலம், சுரங்கபாதையின் தரைத்தள கான்கிரீட் வெடிப்புகள் சரி செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, வெடிப்பு ஏற்பட்ட பகுதியை முழுதுமாக தோண்டி, அப்பகுதியில் கான்கிரீட் கலவையை கொட்டி சீரமைக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

