/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
26 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கினார்
/
26 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கினார்
ADDED : ஜன 04, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்,பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தின குமார் தலைமையில் சூளைப்பள்ளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், சூளை பள்ளம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூட்டையுடன் திரிந்த நபரை சோதனை செய்தனர். மூட்டையில் கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், அந்த நபர் நீலகிரி மாவட்டம், பந்தலுார் தாலுகாவை சேர்ந்த யோகேஷ்வரன், 24, என்பதும், அங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் சில்லரை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரிடம் 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.