ADDED : அக் 27, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்ப்பாக்கம், பாடி, முனீஸ்வரன் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 22. கடந்த ௨௦ல் லாரி மோதி படுகாயமடைந்த இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காலில் அறுவை சிகிசை செய்யப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.
மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால் ஆகாஷ் இறந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்தனர். மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற உறவினர்களை போலீசார் சமரசம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, ஆகாஷ் குடும்பத்தினர் கூறுகையில், 'கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், ஆரம்பத்தில் இருந்தே சரியாக சிகிச்சை அளிக்கவில்லை; தாமதமாக காலில் அறுவை சிகிச்சை செய்தனர். ஆகாஷ் இறப்புக்கு மருத்துவமனை தான் காரணம்' என்றனர்.