sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மெரினாவில் மூன்றாவது நீலக்கொடி கடற்கரை; ஐகோர்ட் கிடுக்கிப்பிடியால் மாநகராட்சி முடிவு

/

 மெரினாவில் மூன்றாவது நீலக்கொடி கடற்கரை; ஐகோர்ட் கிடுக்கிப்பிடியால் மாநகராட்சி முடிவு

 மெரினாவில் மூன்றாவது நீலக்கொடி கடற்கரை; ஐகோர்ட் கிடுக்கிப்பிடியால் மாநகராட்சி முடிவு

 மெரினாவில் மூன்றாவது நீலக்கொடி கடற்கரை; ஐகோர்ட் கிடுக்கிப்பிடியால் மாநகராட்சி முடிவு

1


UPDATED : ஜன 21, 2026 09:35 AM

ADDED : ஜன 21, 2026 05:36 AM

Google News

UPDATED : ஜன 21, 2026 09:35 AM ADDED : ஜன 21, 2026 05:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டதை அடுத்து, மெரினாவில் மூன்றாவது நீலக்கொடி கடற்கரையை உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில், மாநகராட்சி நீச்சல் குளம் அருகே உள்ள, 20 ஏக்கர் பகுதி, நீலக்கொடி மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. நீலக்கொடி சான்று என்பது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, துாய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.

இதில், சுற்றுச்சூழல் தரம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட, 33 தகுதிகளின் அடிப்படையில், இதற்கான சான்று வழங்கப் படுகிறது.

Image 1524529


கோவளம் கடற் கரையை அடுத்து மெரினா கடற்கரை நீலக்கொடி சான்று பெற்றது. மெரினா வரும் மக்கள் நீலக்கொடி சான்று பகுதியில் அதிகம் கூடுகின்றனர்.

எனவே, மெரினா கடற்கரையில், விவேகானந்தா இல்லம் எதிரே, 30 ஏக்கர் பரப்பளவில் நீலக்கொடி கடற்கரையை மாநகராட்சி அமைத்து வருகிறது. இப்பணிகள், 60 சதவீதம் முடிந்துள்ள நிலையில், விரைவில் பயன் பாட்டுக்கு வர உள்ளது.

இதற்கிடையே, பட்டினப்பாக்கம் கலங்கரை விளக்கம் எதிரே, 50 ஏக்கர் பரப்பளவில் மூன்றாவது நீலக்கொடி கடற்கரையை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மெரினாவின் மூன்றாவது நீலக்கொடி கடற்கரை அமைவதால், 100 ஏக்கர் பரப்பளவு கண்காணிப்பு கேமரா வளைத்திற்கு வந்துவிடும். அப்பகுதிகளில் கடைகள் அமைக்க தடை விதிக்கப்படும். அத்துடன், 24 மணி நேரமும் சுகாதாரம் காக்கப்படும். சுற்றுலா பயணியரின் தேவைக்கேற்ப வசதிகள் மேம் படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெரினாவில் இஷ்டம்போல் கடைகளை அமைக்க அனுமதி அளித்து, இயற்கை அழகை கெடுக்கக்கூடாது என, மாநகராட்சியை கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம், இழந்த பெருமை, புகழை மீட்டெடுக்கும் வகையில், மெரினாவில் 100 ஏக்கர் பரப்பளவு இடத்தை, நீலக்கொடி கடற்கரையாக மாற்ற அறிவுறுத்தியது.



இதையேற்று மாநகராட்சி அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.






      Dinamalar
      Follow us