/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 16, 2024 12:33 AM
சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் ஓட்டுனர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 100 பேர் பங்கேற்றனர்.
அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் சங்கத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலச்சந்திரன் கூறியதாவது:
ரயில் ஓட்டுனர்களுக்கு பணி நேரம் ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கு மேல் இருக்காது என மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் 14, 15 மணி நேரமாக இருக்கிறது. ரயில் ஓட்டுனர்களுக்கு வாரத்தில் 30 மணி நேரம் தான் ஓய்வு கிடைக்கிறது. இந்த ஓய்வை 46 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.