/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி
/
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி
ADDED : ஜன 11, 2024 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்,
மதுராந்தகம் அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 29. நேற்று இரவு, வழக்கம் போல், தன் கூரை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு நாள் பெய்த மழையின் காரணமாக வலுவிழந்த வீட்டின் சுவர், நேற்று இரவு இடிந்து பிரவீன்குமார் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரவீன்குமார் உயிரிழந்தார்.
இது குறித்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.