/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பால சுவரில் மோதி கவிழ்ந்த தண்ணீர் லாரி
/
மேம்பால சுவரில் மோதி கவிழ்ந்த தண்ணீர் லாரி
ADDED : ஜன 31, 2024 12:27 AM

அரும்பாக்கம், பூந்தமல்லியில் இருந்து அண்ணா நகர் வழியாக, தனியார் தண்ணீர் லாரி நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறையை சேர்ந்த ஜான் கென்னடி, 47, என்பவர் ஓட்டி வந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அண்ணா ஆர்ச் அருகில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, நெல்சன் மாணிக்கம் நோக்கி செல்லும் மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. நிலைதடுமாறி சாலைலேயே கவிழ்ந்தது. சாலை முழுதும் தண்ணீர் பாய்ந்தது.
ஓட்டுனர், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், லாரியில் சிக்கி இருந்த ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். நள்ளிரவில் விபத்து ஏற்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரி, ராட்சத கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது. அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.