sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மார்ச் 10க்குள் கட்டுரை தரலாம்

/

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மார்ச் 10க்குள் கட்டுரை தரலாம்

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மார்ச் 10க்குள் கட்டுரை தரலாம்

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மார்ச் 10க்குள் கட்டுரை தரலாம்


ADDED : பிப் 18, 2025 12:08 AM

Google News

ADDED : பிப் 18, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, டிச., 6 முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஆய்வு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் செய்திக்குறிப்பு:

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவங்கி, 60 ஆண்டுகள் கடந்துள்ளது. அதை முன்னிட்டு, உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், ஆசியவியல் நிறுவனம், மொரிஷியஸ் தமிழ் கூட்டமைப்பு மற்றும் பிற தமிழ் அமைப்புகள் இணைந்து, 12வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடை நடத்த உள்ளன.

மொரிஷியசில் உள்ள மஹாத்மா காந்தி நிறுவனத்தில், வரும் டிச., 6 முதல் 10ம் தேதி வரை நடத்தப்படுகிறது. 'தமிழர்களின் அயலகத் தொடர்பின் வரலாறு' எனும் தலைப்பில் இந்த மாநாடு நடக்கிறது.

தமிழ் சமூகத்திற்கும் வெளிநாடுகளில் உள்ள சமூகத்திற்கும் இடையேயான பண்பாடு, மொழி, வரலாறு, வணிகம், அரசியல் உள்ளிட்டவற்றை மீட்டெடுக்கும் வகையில், இந்த மாநாடு நடைபெற உள்ளது.

யூதர்களுடனும், அரேபியர்களுடனும் பண்டைய தமிழர் மேற்கொண்ட வணிகத் தொடர்புகள், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவுக்கு இருந்த தரைவழிப்பாதை, ஜப்பான், சீனா மற்றும் கொரியாவில் தமிழ்ப்பண்பாடு உட்பட 53 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கலாம்.

இந்த கட்டுரைகளை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வழங்கலாம்.

'ஏரியல் யுனிகோடு' எழுத்துருவில் வழங்க வேண்டும். ஆய்வு தரவுகளுக்கு போதிய சான்றுகளை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.

ஆய்வுச் சுருக்கத்தை 150 சொற்களுக்குள் மார்ச் 10ம் தேதிக்குள்; முழுக்கட்டுரையை மே மாதத்திற்குள், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார், சென்னை 600119 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

மேலும் விபரங்களுக்கு 044 - 2450 0831 / 1851 ஆகிய எண்களை அழைக்கலாம். info@instituteofasianstudies.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us