/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுத்தியலால் அடித்து பெண் கொடூர கொலை சூட்கேசில் அடைத்து வீசிய வாலிபர் கைது
/
சுத்தியலால் அடித்து பெண் கொடூர கொலை சூட்கேசில் அடைத்து வீசிய வாலிபர் கைது
சுத்தியலால் அடித்து பெண் கொடூர கொலை சூட்கேசில் அடைத்து வீசிய வாலிபர் கைது
சுத்தியலால் அடித்து பெண் கொடூர கொலை சூட்கேசில் அடைத்து வீசிய வாலிபர் கைது
ADDED : செப் 20, 2024 12:31 AM

துரைப்பாக்கம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 26; இன்ஜினியர். இவர், துரைப்பாக்கம், குமரன் குடில் தெருவில் வசிக்கும் சகோதரி குடும்பத்தினருடன் தங்கி, பெருங்குடியில் ஒரு கார் நிறுவனத்திற்கு இரு மாதங்களாக வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 16ம் தேதி, சகோதரி தன் குடும்பத்தினருடன் சிவகங்கை சென்றார். வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன், மாதவரத்தைச் சேர்ந்த தீபா, 32, என்பவரை வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு சென்ற தீபா, அதன் பின் மாயமானார்.
இந்நிலையில், குமரன் குடில் பிரதான சாலையில் கட்டுமானப் பணி நடக்கும் வீட்டு வாசலில், பெரிய சூட்கேசில் ரத்தம் தோய்ந்திருந்தது. நேற்று காலை பணிக்கு வந்த கட்டுமான ஊழியர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது, பெண்ணின் தலையில் தாக்கி கொலை செய்து, உடலை மடித்து வைத்திருந்தது தெரிந்தது.
முதற்கட்ட விசாரணையில், சூட்கேசில் இறந்து கிடந்தது, மாதவரம் தீபா என்பது தெரியவந்தது.
அவரது மொபைல் போன் அழைப்புகளை வைத்து விசாரித்த பின், மணிகண்டன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெண் கொலை பற்றி மணிகண்டன் அளித்த வாக்குமூலம் குறித்து, போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட மணிகண்டனின் சகோதரி வீட்டில் யாரும் இல்லாததால், பெண்ணுடன் வீட்டில் உல்லாசமாக இருக்கலாம் என நினைத்து, 'ஆன்லைன்' வழியாக தீபாவை தொடர்பு கொண்டுள்ளார். அவர், ஒரு நாள் இரவு தனியாக இருக்க, 10,000 ரூபாய் கேட்டுள்ளார்.
இதற்கு சம்மதித்த மணிகண்டன், 17ம் தேதி இரவு தீபாவை வீட்டுக்கு வரவழைத்தார். தீபா கிளம்பியபோது 6,000 ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கு தீபா சம்மதிக்கவில்லை. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சத்தமிட்டு ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்துவேன் என தீபா ஆவேசமாக பேசியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டில் இருந்த சுத்தியலால் தீபா தலையில் பலமாக தாக்கியதில், அவரின் மூளை சிதறி அங்கேயே இறந்தார்; இரவு முழுதும் சடலத்துடனேயே இருந்தார்.
சகோதரி குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துவிடுவர் என்பதால், சடலத்தை யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேற்ற, 18ம் தேதி, பெருங்குடியில் உள்ள ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் வாங்கியுள்ளார்.
சூட்கேசில் உடலை அடைக்க, கால் மூட்டு உள்ளிட்ட பாகங்களை சுத்தியால் அடித்து வளைத்து, திணித்துள்ளார்.
பின், வீட்டில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில், சடலம் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தீபாவின் மொபைல் போன் விபரம், அப்பகுதி 'சிசிடிவி' கேமராவை வைத்து மணிகண்டனை பிடித்தோம்.
நேற்று காலை குடும்பத்தினர் வரவும், எதுவும் நடக்காததுபோல் அமைதியாக உப்புமா சாப்பிட்டு கொண்டிருந்தபோது எங்களிடம் சிக்கினார். எனினும், கொலைக்கு வேறு காரணம் இருக்குமா எனவும் விசாரிக்கிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.