/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நில மோசடி வழக்கில் தியேட்டர் ஓனர் கைது
/
நில மோசடி வழக்கில் தியேட்டர் ஓனர் கைது
ADDED : அக் 10, 2025 08:01 AM

சென்னை; போலி ஆவணம் மூலம் 1.5 கோடி ரூபாய் நிலத்தை விற்ற வழக்கில், கங்கா யமுனா சரஸ்வதி தியேட்டர் உரிமையாளர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மாதவரத்தைச் சேர்ந்த மேரிவர்கீஸ், 65, சமூக நலத்துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கொளத்துாரில் உள்ள, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான இவரது நிலத்தை சிலர், போலி ஆவணம் மூலம் விற்றுள்ளனர்.
இதுகுறித்த அவரது புகாரையடுத்து, நில மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, கொளத்துாரைச் சேர்ந்த சீனிவாசன், 64, மணலியைச் சேர்ந்த இளஞ்செழியன், 50, ஆகிய இருவரும், போலி ஆவணம் மூலம், மேரிவர்கீஸ் நிலத்தை விற்றது தெரிய வந்தது.
நேற்று, இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
சீனிவாசன், கொளத்துாரில் உள்ள கங்கா யமுனா சரஸ்வதி தியேட்டர் உரிமையாளர் என்பதும் இளஞ்செழியன் ஸ்டீல் கடை நடத்தி வருவதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது.