sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெரினாவில் திருட்டு: மூன்று பேர் கைது

/

மெரினாவில் திருட்டு: மூன்று பேர் கைது

மெரினாவில் திருட்டு: மூன்று பேர் கைது

மெரினாவில் திருட்டு: மூன்று பேர் கைது


ADDED : ஆக 16, 2025 03:32 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மெரினாவில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து, கைவரிசை காட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளச்சேரியை சேர்ந்தவர் வினோத். கடந்த, 9ம் தேதி அன்று இரவு நண்பருடன் காரில் மெரினா கடற்கரைக்கு சென்றார். கண்ணகி சிலை பின்புறம், சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு மணற்பரப்பிற்கு சென்றார். பொழுதுபோக்கிவிட்டு, மீண்டும் காரை எடுக்க சென்றார்.

அப்போது, காரின் பின்பக்க கண்ணாடி உடைத்து மடிக்கணிணி, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பையை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மெரினா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை காட்டிய, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பார்த்திபன், 29, ராயப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 21 செல்வா, 24 ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, மடிக்கணிணியை பறிமுதல் செய்தனர்.

கடந்த 13ம் தேதி மெரினா கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அன்பரசு, 46 என்பவரிடம், 1,800 ரூபாயையும், இவர்கள் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us