ADDED : டிச 10, 2024 12:28 AM
அ நிறம் | அளவு
சென்னை, ராயப்பேட்டை, பைகிராப்ஸ், 2வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்சந்தர் கபாலி, 41; தனியார் கல்லுாரி பேராசிரியர். இவருக்கு சொந்தமான பழைய வீடு, ராயப்பேட்டை சாந்தா சாகிப் தெருவில் உள்ளது.
நேற்று மதியம், அவரது பழைய வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே, சென்று பார்த்தபோது, வீட்டில்இருந்த பித்தளைப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
