/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படவேட்டம்மன் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
/
படவேட்டம்மன் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ADDED : மே 14, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி :வியாசர்பாடி, காந்திபுரம் பகுதியில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரியாக பிரபாகரன், 42, என்பவர் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல், பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை, கோவில் கதவை திறந்து பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. மேலும், பித்தளை தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களும் திருட்டு போயின. இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.