/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்த்தசாரதி கோவிலில் தெப்ப உற்சவம் துவக்கம்
/
பார்த்தசாரதி கோவிலில் தெப்ப உற்சவம் துவக்கம்
ADDED : மார் 11, 2024 01:30 AM

சென்னை:திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையில் இருந்து ஏழு நாட்கள், தெப்ப உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம், நேற்று மாலை 6:30 மணிக்கு துவங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் பார்த்தசாரதி பெருமாள், தெப்பத்தில் ஐந்து முறை வலம் வந்து அருள்பாலித்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளின் அருளைப் பெற்றனர். நாளை முதல் இரண்டு நாட்கள், உற்சவர் பார்த்தசாரதி தெப்பம் நடக்கிறது.
அடுத்த நான்கு நாட்களில் முறையே நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி ஆகியோர், தெப்பத்தில் மாலை 6:30 மணிக்கு வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.

