தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இடம் கிடைப்பதில் சிக்கல்

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இடம் கிடைப்பதில் சிக்கல்

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இடம் கிடைப்பதில் சிக்கல்


ADDED : பிப் 12, 2024 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பூர்:பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட 2022ல் திட்டமிடப்பட்டது.

இதனால் தற்காலிகமாக, 16 மாதங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை 74வது வார்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடத்த திட்டமிட்டு, இதற்காக மாநகராட்சியிடம் அனுமதி கடிதம் தரப்பட்டது.

கடிதத்தை ஏற்ற மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் இயங்க மாத வாடகை 43,044 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

2023 பிப்ரவரியில் கட்டடமும் ஒப்படைக்கப்பட்டது. 11 மாதங்களான பின்னும், இன்னும் சமுதாய கட்டடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் மாற்றப்படவில்லை. இதற்கான எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யப்படாததால், ஒதுக்கீட்டை ரத்து செய்ய கடந்த மாதம் மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால், கடந்த ஓராண்டிற்கும் மேலாக பொதுமக்களின் பயன்பாடின்றி உள்ள சமுதாய நலக்கூடம், மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதனிடையே பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்று இடம் கிடைப்பதிலும், புதிய கட்டடம் கட்டவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us