/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பள்ளி வகுப்பறையில் பொங்கும் நீரூற்றால் சிக்கல்
/
அரசு பள்ளி வகுப்பறையில் பொங்கும் நீரூற்றால் சிக்கல்
அரசு பள்ளி வகுப்பறையில் பொங்கும் நீரூற்றால் சிக்கல்
அரசு பள்ளி வகுப்பறையில் பொங்கும் நீரூற்றால் சிக்கல்
ADDED : அக் 18, 2024 12:16 AM

துரைப்பாக்கம்,
துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,900 பேர் உள்ளனர். பொதுப்பணித் துறை பராமரிக்கும் இப்பள்ளியை ஒட்டி, தெற்கு திசையில் ரேடியல் சாலை - இ.சி.ஆர்., விரிவாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு திசையில் காலி இடம், மேற்கு திசையில் ஓ.எம்.ஆர்., உள்ளது.
கடந்த 15ம் தேதி பெய்த மழைநீர், பள்ளி வளாகத்தில் தேங்கியது. அதோடு, தொடர்ந்து ஊற்று எடுப்பதால், வகுப்பறைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழை நின்ற பிறகும் தண்ணீர் வடியவில்லை. இதனால், நேற்று பள்ளி திறந்தும், வகுப்பு நடத்த முடியாததால், விடுமுறை விடப்பட்டது.
பொதுப்பணித் துறையிடம் போதிய கட்டமைப்பு இல்லாததால், வெள்ளத்தை வெளியேற்றும் பணியை, மாநகராட்சி கையில் எடுத்தது.
இதில், 100, 25, 10 குதிரை திறன் உடைய 15 மோட்டார்கள் மற்றும் 10 டிராக்டர் மோட்டார்கள் கொண்டு, மழைநீர் இறைத்து வெளியேற்றப்பட்டது. மொத்தம் 25 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
மைதானத்தில் மழைநீர் வடிந்தது. ஆனால், ஊற்று அதிகமாக உள்ளதால், வகுப்பறையில் வெள்ளம் வடியவில்லை.
இன்று, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கு மாடியில் வைத்து பாடம் நடத்தவும், ஒன்று முதல் ஒனபதாம் வகுப்பு வரை விடுமுறை விடவும், பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து, 100 குதிரை திறன் உடைய மோட்டாரை பள்ளி வளாகத்தில் நிரந்தரமாக வைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சாதாரண மழைக்கே வெள்ளம் தேங்கிய நிலையில், கனமழை பெய்தால் பள்ளியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதனால், பருவமழை முடியும் வரை, பள்ளி முறையாக திறக்குமா என, பெற்றோர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.