/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனல் மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம்
/
அனல் மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : பிப் 03, 2024 12:53 AM
மீஞ்சூர், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து, வல்லுார் அனல் மின் நிலையம் நிறுவி, மூன்று அலகுகளில் 1,500 மெகா வாட் மின் உற்பத்தி செய்து வருகின்றன.
இங்கு 1,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொடர்ந்து வல்லுார் அனல் மின் நிலைய நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்றும், தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, நிலக்கரி மற்றும் சாம்பல் துகள்களில் தொழிலாளர்கள் சிரமத்துடன் பணியாற்றி வருவதாகவும், விபத்துக்களில் பாதிப்படைவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தொழிலாளர்கள் தொடர்பாக எந்த பதிவுகளும் நிர்வாகத்திடம் இல்லாததால், அனைவரது விவரங்களையும் முறையாக பதிவு செய்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

