ADDED : ஏப் 16, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
துரைப்பாக்கம்: தாழம்பூரைச் சேர்ந்தவர் இன்னாசி முத்து, 32. இவர், துரைப்பாக்கம் பகுதியில் காயலான் கடை நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி கடை திறக்கும்போது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
கடையில் இருந்த 60 கிலோ இருப்பு, 8 கிலோ அலுமினிய ஒயர்கள் திருடப்பட்டன. துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த சுனில்குமார், 20, என தெரிந்தது. நேற்று, இவரை கைது செய்த போலீசார், இரும்பு, ஒயர்களை பறிமுதல் செய்தனர்.
