/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரிடம் தப்ப முயன்ற திருடன் கையில் மாவுக்கட்டு
/
போலீசாரிடம் தப்ப முயன்ற திருடன் கையில் மாவுக்கட்டு
போலீசாரிடம் தப்ப முயன்ற திருடன் கையில் மாவுக்கட்டு
போலீசாரிடம் தப்ப முயன்ற திருடன் கையில் மாவுக்கட்டு
ADDED : ஏப் 30, 2025 12:44 AM

திருவொற்றியூர், திருவொற்றியூரை சேர்ந்தவர் சுரேஷ், 38; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 22ம் தேதி, தன் வீட்டருகே மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, மர்ம நபர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினார்.
இது குறித்து, திருவொற்றியூர் போலீசாரிடம் சுரேஷ் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதில், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்த எட்வின், 23, என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் நேற்று எட்வினை பிடிக்க சென்றபோது, எட்வின் போலீசாரிடம் இருந்து தப்பி, சுவர் மீது ஏற முயன்ற போது தவறி விழுந்தார்.
இதில், எட்வினுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், அங்கு அவருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டது. பின், எட்வினை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.