sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பீஹார் நபருக்கு கத்திக்குத்து வழிப்பறி திருடர்கள் கைது

/

பீஹார் நபருக்கு கத்திக்குத்து வழிப்பறி திருடர்கள் கைது

பீஹார் நபருக்கு கத்திக்குத்து வழிப்பறி திருடர்கள் கைது

பீஹார் நபருக்கு கத்திக்குத்து வழிப்பறி திருடர்கள் கைது


ADDED : மார் 06, 2024 12:24 AM

Google News

ADDED : மார் 06, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர் சுனில், 26; பீஹாரைச் சேர்ந்த இவர், அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து 2வது பிரதான சாலை வழியாக, வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, அவரை வழிமறித்த நால்வர், அவரிடம் இருந்து மொபைல் போனை பறிக்க முயன்றனர்.

அவர்களின் அச்சுறுத்தலுக்கு அசராமல் சுனில் அவர்களை எதிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல், அவரை கத்தியால் குத்தினர். அவர், அருகில் இருந்த தொழிற்சாலைக்குள் சென்று உயிர் தப்பினார்.

பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து விசாரித்த அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், திருமங்கலத்தைச் சேர்ந்த சத்யா, 20, அம்பத்துார் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சச்சின், 19, ஜோயல், 19, மற்றும் 17 வயது சிறுவனை, நேற்று அதிகாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us