ADDED : டிச 23, 2024 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்:அம்பத்துார், கள்ளிக்குப்பம், பாடசாலைத் தெருவில், சென்னை உயர்நிலைப்பள்ளியில், கடந்த நவ., 17ம் தேதி, பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த ஐந்து லேப்டாப், மூன்று பிரின்டர், இரண்டு ஸ்பீக்கர், ஆறு யூ.பி.எஸ்., பேட்டரி உள்ளிட்டவை திருட்டு போயிருந்தன.
இது குறித்து அம்பத்துார் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், அம்பத்துார், முருங்காம்பேடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார், 18, மேனாம்பேட்டைச் சேர்ந்த பரதன், 19, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், இரண்டு லேப்டாப், இரண்டு பிரின்டர், இரண்டு மைக், ஒரு ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் புழல் சிறையில் அடைத்தனர்.