‘லிப்ட்’ தர மறுத்தவரை தாக்கிய வழிப்பறி திருடர்கள் சிக்கினர்
‘லிப்ட்’ தர மறுத்தவரை தாக்கிய வழிப்பறி திருடர்கள் சிக்கினர்
ADDED : ஆக 18, 2026 05:22 PM
திருமங்கலம்: ‘லிப்ட்’ தர மறுத்தவரை தாக்கி மொபைல் போன் பறித்த, வழிப்பறி திருடர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பாடிகுப்பம், காமராஜர் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 16-ம் தேதி இரவு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பாடிகுப்பம் சாலை, கிருஷ்ணா பவன் ஹோட்டல் அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த மூவர், அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து ‘லிப்ட்’ கேட்டுள்ளனர். லிங்கேஸ்வரன் மறுத்ததால், ஆத்திரமடைந்த மூவரும் அவரை கீழே தள்ளி தாக்கியதுடன், சட்டைப்பையில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர்.
இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்ற அப்பு, 24, பாடி புதுநகரைச் சேர்ந்த தினேஷ், 23, ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர். முகேஷ் மீது ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட ஏழு வழக்குகள் உள்ளன. தினேஷ் மீது ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
