/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடையில் தொங்கிய டீ - சர்ட் திருடிய பறந்தோர் சிக்கினர்
/
கடையில் தொங்கிய டீ - சர்ட் திருடிய பறந்தோர் சிக்கினர்
கடையில் தொங்கிய டீ - சர்ட் திருடிய பறந்தோர் சிக்கினர்
கடையில் தொங்கிய டீ - சர்ட் திருடிய பறந்தோர் சிக்கினர்
ADDED : செப் 23, 2024 03:14 AM

ராயபுரம்:ராயபுரம், சிங்காரத்தோட்டம் 8வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன், 40. இவர், அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 20ம் தேதி, இவரது கடையின் வெளியே தொங்க விடப்பட்டிருந்நத டீ - சர்ட்டை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பைக்கில் இருந்தபடி திருடி, சிட்டாக பறந்தனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
இது குறித்து, ராயபுரம் போலீசில் கங்காதரன் புகார் அளித்தார். விசாரணையில், காசிமேடு, பி.பி.அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சகாயராஜ், 23, காசிமேடு, இந்திரா நகர், அத்திப்பட்டு பள்ளம் குடிசை பகுதியை சேர்ந்த அனுஷ்குமார், 19, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர்.