/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு, கடைகளை அபகரித்து மோசடி 'தில்லாலங்கடி' வாடகைதாரர் கைது
/
வீடு, கடைகளை அபகரித்து மோசடி 'தில்லாலங்கடி' வாடகைதாரர் கைது
வீடு, கடைகளை அபகரித்து மோசடி 'தில்லாலங்கடி' வாடகைதாரர் கைது
வீடு, கடைகளை அபகரித்து மோசடி 'தில்லாலங்கடி' வாடகைதாரர் கைது
ADDED : ஆக 23, 2025 12:24 AM

சென்னை, போலி ஆவணம் மூலம், வீடு மற்றும் கடைகளை அபகரித்து மோசடி செய்த தில்லாலங்கடி வாடகைதாரர் கைது செய்யப்பட்டார்.
பெருங்குடியைச் சேர்ந்தவர் சாரா வஹாப், 34. இவருக்கு, ராயப்பேட்டை கவுடியா மடம் சாலையில், இரண்டு மாடி கொண்ட குடியிருப்பு உள்ளது.
இங்கு, முதல் தளத்தில் நான்கு வீடுகளும், கீழ் தளத்தில் புல்லா ராவ் என்பவரின் போட்டோ ஸ்டூடியோ உட்பட மூன்று கடைகளும் இயங்கி வந்தன. கடந்த 2018ம் ஆண்டு, சாரா வஹாப் சவுதி அரேபியாவிற்கு சென்றார்.
கொரோனா தொற்று பரவல் காலகட்டத்தில், அவரால் நாடு திரும்ப முடியவில்லை. தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, 2022ல் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், அவரது ராயப்பேட்டை யில் உள்ள குடியிருப்பை, புல்லா ராவ் இறந்த நிலையில், அவரது மகன் அசோக், போலி ஆவணம் மூலம் அப கரித்தது தெரிந் தது. மேலும், அவற்றை வாடகைக்கு விட்டு, 27 லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளார்.
இது குறித்து சாரா வஹாப் கேட்டபோது, அசோக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரித்த போலீசார், வீடு மற்றும் கடைகளை அபகரித்த அசோக்கை நேற்று கைது செய்தனர்.