தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூன்றாவது 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்ட அறிக்கை ஜன.,14ல் வெளியீடு

மூன்றாவது 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்ட அறிக்கை ஜன.,14ல் வெளியீடு

மூன்றாவது 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்ட அறிக்கை ஜன.,14ல் வெளியீடு


ADDED : செப் 24, 2025 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, : ''சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்தின் வரைவு அறிக்கை, வரும் ஜன., 14ல் வெளியிடப்படும்,'' என சி.எம்.டி.ஏ., தலைவரும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008 ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி அமைக்கப்பட்ட குழுக்கள் முறையாக செயல்படாததால், முழுமை திட்டம் காலாவதியாகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், உலக வங்கி வழிகாட்டுதலின்படி, மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு பணிகளை, சி.எம்.டி.ஏ., 2021ல் துவங்கியது.

பொதுமக்கள் கருத்து அடிப்படையில், சென்னை பெருநகருக்கான தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு அங்காடி நிர்வாக குழுவுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை, அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

சி.எம்.டி.ஏ., சார்பில் செயல்படும் கோயம்பேடு அங்காடி நிர்வாக குழுவுக்காக தனி இணையதளம் துவக்கப்பட்டு உள்ளது.

கோயம்பேடு சந்தையில் உள்ள, 3,000க்கும் மேற்பட்ட கடைகள் தொடர்பான பராமரிப்பு கட்டணம், விலை நிர்ணய பணிகள் இனி ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும்.

கோயம்பேடு சந்தை வளாகத்தில், செப்., 25 முதல் அக்., 5 வரை ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதன் வரைவு அறிக்கை, ஜன., 14ல் வெளியிடப்படும்.

இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் கோ. பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us