ADDED : ஜன 18, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
சென்னை: மெரினா கடற்கரையில் இன்று மாலை, 'சென்னை சங்கமம், என் சென்னை' மற்றும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய பாடல்களுடன் கூடிய இசை விழா நடக்கிறது.
தமிழக அரசு அறிவிப்பின்படி, கடந்தாண்டு முதல் ஜன., மாதம், 'திருக்குறள் வாரம்' சிறப்பிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில், இன்று மெரினா கடற்கரையில், 'திருக்குறள் வாரம்' நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 3:00 முதல் 6:00 மணி வரை, சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடக்கும்.
தொடர்ந்து, நடிகை சுஹாசினியின், 'என் சென்னை' நிகழ்ச்சியும், ஜேம்ஸ் வசந்தன் இசையில், 'திருக்குறளும் தமிழ் இலக்கிய பாடல்களும்' என்ற இசை விழாவும் நடைபெற உள்ளன.
