/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய் வெடித்து கழிவுநீர் ஓடிய திருமங்கலம் சாலை சீரமைப்பு
/
குழாய் வெடித்து கழிவுநீர் ஓடிய திருமங்கலம் சாலை சீரமைப்பு
குழாய் வெடித்து கழிவுநீர் ஓடிய திருமங்கலம் சாலை சீரமைப்பு
குழாய் வெடித்து கழிவுநீர் ஓடிய திருமங்கலம் சாலை சீரமைப்பு
ADDED : ஜூலை 01, 2025 12:19 AM

திருமங்கலம், நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட ராட்சத கழிவுநீர் குழாய் வெடித்து சேதமடைந்த 100 அடி சாலையை, குடிநீர் வாரியத்தினர் ஒரே நாளில் சீரமைத்தனர்.
அண்ணா நகர் 'பி' பம்பிங் நிலையத்தில் இருந்து, கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட குழாய் செல்கிறது. 1,000 மில்லி மீட்டர் விட்டம் உடைய இந்த இரும்பு குழாய், 10 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டது.
இதில், திருமங்கலம் - கோயம்பேடு செல்லும், 100 அடி சாலையில் புதைக்கப்பட்ட குழாய், நேற்று முன்தினம் காலை திடீரென வெடித்து, சாலை மிகவும் சேதமடைந்தது.
அதிகப்படியான கழிவுநீர் வெளியேறி, சில மீட்டர் துாரம் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதேஇடத்தில் மெட்ரோ பணிகளும் நடப்பதால் கூடுதாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதையடுத்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் பள்ளம்எடுத்து ஆய்வு செய்ததில், அதிக அழுத்தம் காரணமாக 2 மீட்டர் இரும்பு குழாயில் மட்டும் சேதம் அடைந்தது தெரிந்தது.
சேதமடைந்த குழாயை, 6 மீட்டர் முழுதுமாக அகற்றி, புதிதாக குழாயை இணைத்தனர். பின், மணல் கொட்டி, சாலையை தற்காலிகமாக ஒரே நாளில் சீரமைத்தனர்.
'மெட்ரோ' விளக்கம்
'நிலத்தடியில் கழிவு நீர் குழாய் சேதமடைந்ததால், திருமங்கலம் 100 அடி சாலையில் கழிவுநீர் தேங்கியது. இப்பிரச்னைக்கும், மெட்ரோ ரயில் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.