தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரிக்கெட் இறுதி போட்டியில் திருத்தணி, சேஷாத்ரி அணி

கிரிக்கெட் இறுதி போட்டியில் திருத்தணி, சேஷாத்ரி அணி

கிரிக்கெட் இறுதி போட்டியில் திருத்தணி, சேஷாத்ரி அணி


UPDATED : மே 01, 2026 07:43 PM

ADDED : மே 01, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 07:43 PM ADDED : மே 01, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்குன்றம் அடுத்த கோஜன் கல்லுாரியில் நடந்த, திருவள்ளூர் மாவட்ட நான்காவது டிவிஷன் - குவாலிபையர் சுற்றில், முதலில் விளையாடிய ஜெயா கல்வி குழு ஆர்.சி., அணி 30 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய திருத்தணி சி.சி., அணி, அதிரடி ஆட்டத்தால் 24.1 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட் இழப்புக்கு, 158 இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றதுடன், இறுதி போட்டிக்கு நுழைந்துது.

முதலாவது டிவிஷன் குவாலிபையரில், மாஸ் சி.சி., அணியை வீழ்த்தி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சேஷாத்ரி எம்.சி.சி., அணி, இறுதிக்குத் தகுதி பெற்றது.

ஸ்பிரிடெட் யூத் அணி

கால்பந்தில் வெற்றி

சென்னை கால்பந்து சங்கம் சார்பில், ஆடவர் சூப்பர் லீக் கால்பந்து போட்டி, சென்னை லயோலா கல்லுாரி மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்தது. ஸ்பிரிடெட் யூத் அணி, மதர் எஸ்.எஸ்.எஸ்., அணியுடன் மோதியது.

மொத்தம் 90 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான போட்டியில், அசத்தலாக விளையாடிய ஸ்பிரிடெட் யூத் அணி வீரர் கணேஷ், 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன் பின், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. முடிவில், ஸ்பிரிடெட் யூத் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில், மதர் எஸ்.எஸ்.எஸ்., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us