/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை ஊசியால் இளைஞர் பலி திருவல்லிக்கேணி வாலிபர்கள் கைது
/
போதை ஊசியால் இளைஞர் பலி திருவல்லிக்கேணி வாலிபர்கள் கைது
போதை ஊசியால் இளைஞர் பலி திருவல்லிக்கேணி வாலிபர்கள் கைது
போதை ஊசியால் இளைஞர் பலி திருவல்லிக்கேணி வாலிபர்கள் கைது
ADDED : மே 20, 2025 01:56 AM
சென்னை, திருவல்லிக்கேணி, தாயார் சாஹிப் தெரு, 1வது சந்து பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன், 21. இவர், மண்ணடியில் உள்ள ஹோட்டலில் கறி வெட்டும் தொழில் செய்து வந்தார்.
கடந்த 14ம் தேதி இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது நண்பர்கள், மொய்தீனை ஆட்டோவில் ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், வரும் வழியிலேயே அவர் இறந்தது தெரிய வந்தது. அவரது உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மறுநாள் லாயிட்ஸ் சாலையில் உள்ள தர்காவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில், போதை ஊசி போட்டுக் கொண்டதால் மொய்தீன் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் மொய்தீனை மருத்துவமனைக்கு அழைத்து வந்த நண்பர்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், போதை ஊசி வாங்கிக் கொடுத்ததை நண்பர்கள் ஒப்புக் கொண்டனர்.
தொடர்ந்து மொய்தீன் உயிரிழப்பிற்கு காரணமான, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அமித் ஷெரிப், 24, கார்த்திக், 23, திருவொற்றியூரைச் சேர்ந்த இனயத்துல்லா, 22, ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான சலீம் என்பவரை தேடி வருகின்றனர். இதில் கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.